அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவினை மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கான ஆதரவிலிருந்து விலகியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியினூடாக பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான இவர்கள், அரசாங்கத்துக்கு ஆதரவினை கடந்த காலங்களில் வழங்கியிருந்தனர்.
பைசல் காசிம், இஷாக் ரஹ்மான், A.M தௌபீக் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு அரச ஆதரவிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர். நாட்டில் தற்போதைய நிலைக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கயினை எடுக்காத காரணத்தினால் இந்த முடிவினை தாம் எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்திருந்தார்.
பைசல் காசிம், இஷாக் ரஹ்மான் ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினையும், A.M தௌபீக் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
