லிட்ரோ எரிவாயு விநியோகம் இம்மாதம் 25 ஆம் திகதி வரை நடைபெறாதென லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. கையிருப்பு இல்லாதமையினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 அலல்து 26 ஆம் திகதிகளில் கப்பல் வந்து சேரும் வாய்ப்புகள் காணப்படுவதாகவும், அவ்வாறு வருகை தரும் பட்சத்தில் உடனடியாக விநியோகம் ஆரம்பிக்கப்படுமெனவும் லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது. இந்த தட்டுப்பாடு நிலை இன்னமும் 2 மாதங்களுக்கு தொடருமெனவும், அதன் பின்னர் சீரான நிலை உருவாகுமெனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
