ரம்புக்கணையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்திய சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணைகளுக்காக பொலிஸ் மா அதிபர் C.D விக்ரமரட்ண இன்று(22.04) காலை 11 மணிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற இடத்தையும் மனித உரிமைகள் ஆணைக்குழு நேரில் சென்று பாரவையிட்டுள்ளது. விசாரணைகள் நிறைவடைந்ததும் விசாரணை அறிக்கை இலங்கை அரசாங்கத்துக்கு கையளிக்கபப்டும்.
இந்த விசாரணைக்களுக்காக மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரும் அழைக்கப்பட்டுள்ள அதேவேளை, சம்பவத்துடன் நேரடி தொடர்புகளை கொண்டுள்ள கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், ரம்புக்கணை பிரிவு பொலிஸ் அத்தியட்சகர், ரம்புக்கணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
