இலங்கையுடன் சாதகமான பேச்சுவார்த்தை – IMF

பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இலங்கை “நம்பகமான மற்றும் ஒத்திசைவான மூலோபாயத்தை” நடைமுறைப்படுத்துவது மற்றும் அதன் சமூக பாதுகாப்பு வலையை வலுப்படுத்துவதுடன் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் வறுமை கோட்டுக்கு உட்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பது தொடர்பான விடயங்கள் நடைபெற்ற கலந்துரையாடல்களில் உள்ளடக்கியதாக சர்வதேச நாணய நிதியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வோஷிங்டனில் சர்தேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கிகளுடனான பேச்சுவார்த்தை இலங்கை பிரநிதிகளுடன் இடம்பெற்றது. இலங்கையின் பொருளாதர சிக்கல்களை தீர்ப்பதற்கான திட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், ஆரம்ப கட்ட நிபுணத்துவ செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் உதவி நிகழ்ச்சி திட்டம் தொடர்பிலும் பேசப்பட்டுளளதாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வழங்கியவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்த இலங்கை முன் வந்துள்ளமைவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள IMF, இலங்கையின் மோசமான பொருளாதர சிக்கலிலிருத்து வெளிவர சர்வதேச நாணய நிதியம் ஆதரவு வழக்குமெனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையுடன் சாதகமான பேச்சுவார்த்தை - IMF
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version