கண்டியில் ஏற்பட்ட மண் சரிவில் ஒருவர் மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி போகம்பரவில் கழிவு நீர் வேலைத்திட்டத்தில் கடமையாற்றிய ஊழியர் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஏற்பட்ட மண்சரிவில் அகப்பட்ட நபர் மீட்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
