ரம்புக்கணை சம்பவம் – நான்கு பொலிஸார் கைது

ரம்புக்கணையில் போராட்டகாரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார் மற்றும் அதற்கு உத்தரவிட்ட கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்திரட்ன ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்திரட்ன கொழும்பிலும், ஏனைய பொலிஸார் கண்டி குண்டசாலையில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ள அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்திற்கு உத்தரவிட்ட கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்திரட்ண, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட மற்றைய பொலிஸார் உட்பட ஏழு பேரையும் கைது செய்து மே மாதம் 02 ஆம் திகதி நடைபெறவுள்ள விசாரணைகளின் போது முன்னிலை படுத்துமாறு கேகாலை நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

நீதிமன்றத்தில் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்த பொலிஸார் தமக்கு சுகயீனம் ஏற்பட்டதாக கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

சம்மந்தப்பட்ட செய்தி

ரம்புக்கணை சம்பவம் - நான்கு பொலிஸார் கைது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version