ஜனாதிபதியின் முடிவுக்கு தனது ஆதரவு – பிரதமர்

நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு ஜனாதிபதி எடுக்கும் முடிவுகளுக்கு தான் ஆதரவு வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.
20 ஆம் திருத்த சட்ட திருத்தம் மூலமாகவே ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகளுக்கு தீர்வுகளை பெற முடியுமெனவும், அதற்கு தான் முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும் பிரதமர் ஜனாதிபாதிக்கு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ பெரும்பான்மையினை கொண்டிருப்பதனால் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகமாட்டேன் என தெரிவித்துள்ளதாகவும், பொருளாதர சிக்கலில் உள்ள நாட்டை மீட்டெடுக்க தான் பதவி விலக மாட்டேன் என ஜனாதிபதிக்கு தெளிவாக கூறியுள்ளார் என கூறப்படுகிறது.

ஜனாதிபதி தனிப்பட்ட ரீதியில் பிரதமரிடம் பதவி விலக கோரியதாகவும் பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஜனாதிபதி பிரதமரை பதவிநீக்கம் செய்தால் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டில் பிரதமர் இருப்பதாகவுமே அறிய முடிகிறது.

ஆளும் கட்சிக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற நிலையும், பிரதமர் பதவி விலக வேண்டுமென்ற நிலையும் காணப்படுகிறது. எதிர்க்கட்சிகள் முதலில் ஜனாதிபதி பதவி விலகவேண்டும். பின்னர் அரசாங்கத்தின் நிலையினை பாராளுமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலையில் காணபப்டுகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

ஜனாதிபதியின் முடிவுக்கு தனது ஆதரவு - பிரதமர்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version