மீண்டும் தலைமை பொறுப்பையேற்கும் டோனி

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பொறுப்பை மீண்டும் மஹேந்திரா சிங் டோனி ஏற்கவுள்ளதாக சென்னை சுப்பர் கிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரவீந்தர் ஜடேஜா வீரராக விளையாடினாள் மேலும் திறமைகளை அழுத்தங்களின்றி வெளிக்காட்ட முடியுமென்ற நம்பிக்கையினை வெளியிட்டதன் காரணமாக டோனி தலைமை பொறுப்பை மீண்டும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணி 8 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 2 வெற்றிகளை மாத்திரமே பெற்றுள்ளது. மீதமுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அடுத்த சுற்றுக்குள் செல்லும் வாயுப்புக்கள் உருவாகும்.

இன்று(01.05) இரவு சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைஸ் ஹைதராபாத் அணிக்குமிடையிலான போட்டி
நடைபெறவுள்ளது.

மீண்டும் தலைமை பொறுப்பையேற்கும் டோனி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version