காலிமுகத்திடலில் கடந்த 23 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பொலிஸார் முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காலிமுக திடலில் போராட்டங்களை தடுக்கும் முகமாக பொலிஸார் அந்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகிறது.
நீர் அடிக்கும் தாங்கிகள், கண்ணீர் குண்டு பிரயோகம் செய்யும் வாகனங்களும் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கலகம் அடக்கும் விசேட பொலிஸ் பிரிவினரும் அதற்கான தயார்படுத்தல்களுடன் போராட்ட இடத்துக்கு வருகை தந்துள்ளனர்.
பொலிஸ் அதகிகாரிகள் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் பேச்சுவார்தைகளிலும் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பதாகவும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுவதற்கான சாத்திய கூறுகள் ஏற்படும் நிலையில் இந்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சி நடைபெறுகிறது என்ற பேச்சுகளும் உருவாகியுள்ளன.
