இலங்கை கிரிக்கெட் ஊழல் நிறைந்த இடம்

இலங்கை அரசாங்கத்தை விட மிக மோசமான ஊழல் நிறைந்த இடம் இலங்கை கிரிக்கெட் நிறுவனமென முன்னாள் இலங்கை அணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா, கர்நாடக, பெங்களூரு ஒலிம்பிக் பவன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ரணதுங்க “நிபுணத்துவமற்றவர்களது, முறைகேடான முகாமைத்துவம் மூலமும் பல நல்ல கிரிக்கெட் வீரர்கள் உருவாக்கப்பட்ட போதும் இலங்கை கிரிக்கெட் அதனை வீணடித்து வருவதாக குற்றம் சுமத்தினார்.

2015 ஆம் ஆண்டிலிருத்து இலங்கை கிரிக்கெட்டின் 143 அல்லது 144 வாக்குகள் என்பது ஊழல் நிறைந்ததாக காணப்படுவதாகவும், ஒரு சிறந்த விளையாட்டு அமைச்சர் வந்து இவற்றை எல்லாம் சீர் செய்ய வேண்டுமென தான் எதிர்பார்ப்பதாகவும் ஆனால் கள்ளர்களே அந்த பதவியினை கைப்பற்றுவதாகவும் தனது உரையில் தெரிவித்ததாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெங்களூரு, புட்டபார்த்தி சத்திய சாய் பாபா மத்திய நம்பிக்கை நிதியத்துக்கும் விஜயம் செய்த அர்ஜுன ரணதுங்க இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடுகளுக்கான உதவியாக, சிறுவர்களுக்கான மருத்துவ பொருட்களை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் ஊழல் நிறைந்த இடம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version