பிரதி சபாநாயகர் தெரிவிக்க இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக பரிந்துரை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெற்றி பெற்றுள்ளார்.
ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவுடன் இந்த வெற்றி பெறப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்பட்டு வரும் நிலையில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கும் முனைப்பில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ள நிலையில், மீண்டும் பொதுஜன பெரமுன , சுதந்திர கட்சி ஆகியன இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளன.
ரஞ்சித் சியாம்பலாபிட்டிய கடந்த 30 ஆம் திகதி திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியினை இராஜினாமா செய்தார். இந்த நிலையில் மீண்டும் அவரே பரிந்துரை செய்யப்பட்டார்.
இலங்கையில் நடைபெற்று வரும் கோமாளி கூத்தான அரசியலுக்கு இந்த பரிந்துரை சிறந்த உதாரணம். ரஞ்சித் சியம்பாலாபிட்டிய இந்த பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக முதலில் ஜனாதிக்கு இராஜினாமா கடிதம் வழங்கினார். அதனை ஜனாதிபதி ஏற்க மறுத்தார். மீண்டும் இரண்டாவது தடையாக வழங்கிய போது ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் தனக்கு அந்த பதவி வேண்டாமென்ற நபரே மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக இம்தியாஸ் பகீர் மார்க்கர் பரிந்துரை செய்யப்பட்டார். இருவருக்குமிடையிலான வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு ஆதரவாக 148 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.