எரிபொருள் விலையேற்ற சூத்திரம் வரும் வாரம் அமைச்சரவையின் அனுமதிக்கு வழங்கப்படுமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மற்றும் லங்கா IOC நிறுவனங்களுக்கான விலையேற்றமாக அமையவுள்ளது.
ஏற்படும் நட்டத்தை குறைப்பதற்கு இந்த விலையேற்றம் நடைமுறைப்பபடுத்தப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், டொலர் 330 ரூபாவாக இருந்த போது விலையேற்றம் செய்யப்பட்டதாகவும் அதன் பின்னர் விலையேற்றம் செய்யவில்லையெனவும் தெரிவித்ததோடு, இந்த விலையேற்றத்தின் மூலம் இலாபம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு இலாபம் ஏற்படாதெனவும், ஏற்படும் நட்டத்தை குறைக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விலையேற்றத்தில் பெரிய தொகை அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு டொலர் பெறுமதி எதிர்காலத்தில் அதிகரிக்கும் போது எரிபொருள் விலையேற்ற வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.