வவுனியா மயானத்தில் கொரோனா உடல்களை எரியூட்ட வரிசையில் காத்திருப்பு

வவுனியா மயானத்தில் கொரோனா உடல்களை எரியூட்ட வரிசையில் காத்திருப்பு வவுனியா நகரசபைக்கு சொந்தமான பூந்தோட்டத்தில் அமைந்துள்ள பொது மயானத்தில் கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நகரசபை தலைவர் கெளதமன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் கொரோனாவினால் இறப்பவர்கள் மட்டுமன்றி மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற இடங்களில் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் வவுனியா பூந்தோட்டம் பொது மயானத்திலேயே தகனம் செய்யப்பட்டுகின்றன. இறப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இறந்த உடல்களை எரிப்பதற்கு நேரம் தேவைப்படுவதனாலும், ஒரு உடலை எரித்து இரண்டாவது உடலை எரிப்பதற்கு குறிப்பிட நேர இடைவேளை வழங்க வேண்டும். இதன் காரணமாக உடல்களை எரிப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், வரிசையில் உடல்கள் எரியூட்ட காத்திருப்பதாகவும் நகரசபை தலைவர் கெளதமன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். இன்று (28.08.2021) மட்டும் மன்னாரிலிருந்து 5 உடல்கள் பூந்தோட்டம் பொது மயானத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். நகரசபை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த உடல்களை எரியூட்டுவதற்காக மிக கடுமையாக வேலை செய்து வருகின்றனர். இந்த நெருக்கடியான காலத்தில் தம்மால் இயன்றளவு உடல்களை எரியூட்ட நடவடிக்கை எடுத்துளளதாகவும், அனைவருக்குமான சேவையினை வழங்க காத்திருப்பதாகவும் நகரசபை தலைவர் கெளதமன் தெரிவித்தார். தொடர்ந்தும் அதிகளவான மரணங்கள் வவுனியாவிலும் நிகழ்ந்து வரும் நிலையில் வவுனியா மக்கள் அவதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.#vmedia#vthamil#Vavuniya#UCVavuniya#coronavirus#COVID19#CoronaDeath

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version