மஹிந்த தற்போது எங்குள்ளார்?

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமிலிருந்து வெளியியேறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கடற்படை முகாமில் அவரை தொடர்ந்து தங்க வைக்க முடியாத நிலையில் கடல் மார்க்கமாக பயணித்து அவர் பாதுகாப்பான தீவொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடற்படை முகாமுக்கு உட்படா சோபர் தீவு எனுமிடத்திலுள்ள கடற்படையினரால் நடாத்தப்படும் விடுதி ஒன்றும், ஜனாதிபதி மாளிகை ஒன்றும் உள்ளன. அங்கே அவர் தனது குடும்பத்தோடு தங்கியிருப்பதாக மேலும் திருகோணமலை தகவல்கள் தெரிவிக்கின்றான.

திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்னதாக காலையிலிருந்து நடைபெற்ற போராட்டங்கள் தற்போது நிறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் உறுதி செய்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதற்காகன நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், கடல்மார்க்கமாக விமான நிலையம் ஒன்றுக்கு பயணித்து அதன் மூலமாக வெளிநாட்டுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கபப்டுகிறது.

பயணங்களை மேற்கொள்ளும் அளவுக்கு அவரது உடல் நிலை நல்ல நிலையில் இல்லை என்ற காரணத்தினால் பயணிக்கும் திட்டங்கள் தாமதமாகி வருவதாகவும் மேலும் அறிய முடிகிறது.

வி மீடியாவுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த தகவல்களை பகிர்ந்துள்ளோம். உத்தியோகபூர்வமாக இந்த தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை.

மஹிந்த தற்போது எங்குள்ளார்?
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version