பாராளுமன்றத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்ட பின்னரே பாராளுமன்ற கூட்டங்கள் நடத்தப்ப்படுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன அறிவித்துள்ளார்.
நாளைய தினம்(11.05) நடைபெறவிருந்த கட்சி தலைவர்களது கூட்டம் சபாநாயகரினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. 17 ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டபப்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் அன்றைய தினம் பாராளுமன்றம் கூட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லையென மேலும் தெரியவருகிறது.
