ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாரளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கிறார் என்ற தகவல்கள் சில ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரவி வருகின்றன.
ஜனாதிபதியின் உரை ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் ஊகங்களின் அடிப்படையில் இந்த செய்தி வெளியாகியுள்ள நிலையில் இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை.
ஜனாதிபதியின் உரையினடிப்படையில் பாராளுமனற பெரும்பாண்மை உடைய கட்சியினை உடையவர் மற்றும் மக்களது ஆதரவு பெற்ற ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார். ஆகவே இந்த இரண்டுமற்ற ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பிரதமராக நியமிப்பாரா என்பது தொடர்பில் சந்தேகங்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்படுகிறது என்பதும் மற்றைய கட்சிகள் இந்த நிலைப்பாட்டுக்கு சாதகமாக செயற்படுமா என்பதிலும் கூட ரணில் விக்ரமசிங்கவின் நியமனம் தங்கியிருக்கலாம். அண்மைக்காலமாக பிரதமர் பதவியினை பெறுகிறார் என பலரது பெயர்கள் இவ்வாறு வெளிவந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
