சுயாதீன அரசாங்கத்தை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்

இடைக்கால அரசாங்கம் அமைக்க யாரும் முன்வராவிட்டால் சுயாதீன அரசாங்கத்தை அமைத்து நாட்டை முன்னோக்கி நகர்த்தி செல்ல வேண்டுமென பாரளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.

இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகி இரண்டு நாட்கள் கடந்து விட்ட நிலையில் இன்னமும் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படவில்லை. யாரும் இடைக்கால அரசாங்கம் அமைக்க முன்வராவிட்டால் ஜனாதிபதி சுயாதீனமாக அரசாங்கம் ஒன்றை அமைத்து நாட்டை முன் நகர்த்தி செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுயாதீன அரசாங்கத்தை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version