சபாநாயகர் கதிரையில் அமர சாணக்கியன் தடுக்கப்பட்டார்

பாராளுமன்றத்தில் இன்றைய ஒத்திவைப்பு விவாதம் ஒன்றின்போது நேற்றைய (17.05) நாடாளுமன்ற அமர்வுக்கு தலைமை தாங்கிய சபாநாயகர், ஒத்திவைப்பு விவாதம் ஒன்றின்போது, பாரளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை அடுத்ததாக பாராளுமன்றத்துக்கு தலைமை தாங்குவதற்காக அழைத்த போதும், அவைத் தலைவர் தினேஸ் குணவர்த்தன, அதனை தடுத்த சம்பவம் இடம்பெற்றுளளதாக சாணக்கியன் பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.

“சபைக்கு தலைமை தாங்குமாறு படைக்கள சேவிதர் கேட்டுக்கொண்டமைக்கு அமைய நான் தயாராக இருந்தபோதும், தினேஸ் குணவர்த்தன, சபாநாயகருக்கு அனுப்பிய சில தகவல்களின் அடிப்படையில் எனக்கு பதிலாக மற்றும் ஒருவர் சபைக்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டமையானது, நாடாளுமன்ற உறுப்பினரான எனது சிறப்புரிமையை மீறும் செயலாகும்.

நாம் கதிரைகளுக்காக பாராளுமன்றம் வரவில்லை மக்களுக்காகவே வந்தோம். ஆனால் இவ்விடயமானது ஜனநாயகத்தை மீறும் ஒரு செயற்பாடாகும். பாராளுமன்றம் மொட்டுக்கட்சிக்கு மாத்திரம் உரியது அல்ல.
ரணில் விக்கிரமசிங்கவின் (டீல்) வர்த்தகம் தொடர்பான விவாதத்தின்போது, நான் சபைக்கு தலைமை தாங்குவதை தினேஸ் குணவர்த்தன விரும்பவில்லை” என சாணக்கியன் MP மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான M.A சுமந்திரன் உட்பட நானும் அவை தலைவர் தினேஸ் குணவர்த்தனவுடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டோம் எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அவைத்தலைவர் டினேஷ் குணவர்தன சாணக்கியன் கேட்க்கும் கேள்விகள் அனைத்தும் என்னால் பதில் சொல்ல முடியாது. இந்த விடயத்துக்கு சபாநாயகர்தான் பதில் கூறவேண்டும் என பாராளுமன்றத்தில் பதில் கூறினார்.

சபாநாயகர் கதிரையில் அமர சாணக்கியன் தடுக்கப்பட்டார்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version