லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம் இன்று ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்ட போதும் இன்று ஆரம்பிக்கவில்லை என லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.
சீரற்ற வாநிலை காரணமாக வருகை தந்துள்ள எரிவாயு கப்பலிலிருந்து சிலிண்டர்களை இறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்பார்க்கப்பட்டது போன்று இன்று விநியோகத்தை ஆரம்பிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று விநியோகம் நடைபெறாத காரணத்தினால் வரிசைகளில் எரிவாயுவுக்காக காத்திருக்க வேண்டாமென மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற வாநிலை இன்றும் தொடர்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
