பேரறிவாளனுக்கு தமிழக அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துகிறார்கள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டு, வழக்கில் 31 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளன் இன்று உயர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் விடுதலை செய்யப்பட்டதனை தொடர்ந்து தமிழத்தின் அரசியல் பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவரை நீதிமன்றம் ஏற்கனவே விடுதலை செய்த நிலையிலும் ஆளுநர் வேண்டுமென்ற இழுத்தடிப்பு செய்து மாநில அரசின் முடிவுகளில் தலையிட அதிகாரமில்லை என்பதனை நீதிமன்றம் வெளிப்படுத்தியிருப்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளனர். தனது மகனின் விடுதலைக்காக போராடிய அவரின் தாயாரான அற்புதம்மாளின் போராட்டத்தையும் பலரும் பாராட்டியுள்ளனர்.

“ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்” என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், விஜயகாந்த், சரத்குமார், சீமான், கமல்ஹாசன், ரி.ஆர் பாலு, சசிகலா, ராமதாஸ், தமிழிச்சி பாண்டியன் உட்பட பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பேரறிவாளனுக்கு தமிழக அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துகிறார்கள்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version