முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று இலங்கையின் பல பகுதிகளிலும் அமைதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. வருடா வருடம் அனுஸ்டிக்கப்படுவது போல இன்றும் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் சுடர் ஏற்றப்பட்டு நினைவு அனுஷ்டிக்கபப்பட்டது.

மக்களோடு அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனரா.

கொழும்பு கோட்டா ஹோ ஹம பகுதியிலும் இந்த நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டுள்ளமை முக்கிய விடயமாக அமைந்துள்ளது. வடக்கு கிழக்கு பகுதிகளில் அனுஷ்டிக்கப்படும் இந்த நிகழ்வு அனைவரும் இலங்கையர் எனும் கோட்பாட்டில் சகல இன மக்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி போன்ற தூபி ஒன்று அமைக்கப்பட்டு அந்த தூபிக்கு மக்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அத்தோடு கஞ்சியும் பகிரப்பட்டது. கலந்து கொண்ட மக்கள் அனைவரும் உணர்வுபூர்வமாக தங்களது அஞ்சலிகளை செலுத்தினர்.

“அனைவரும் இலங்கையர், 13 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக கொழும்பில்” போன்ற வாசகங்களுடன் இந்த நிகழ்வில் பங்குபற்றிய பல சிங்கள மக்கள் நினைவு தினம் பற்றிய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
கொழும்பு நிகழ்வு
கொழும்பு நிகழ்வு
முள்ளிவாய்க்கால் நிகழ்வு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version