இன்னமும் இரண்டு தினங்களுக்கு பெற்றோல் விநியோகம் இடம்பெறாதென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். வார இறுதியிலே மீண்டும் பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்குமென மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களை பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாமென அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் உலக வங்கியிடமிருந்து 160 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளதாகவும், அதனை எரிபொருள் கொள்வனவுக்காக பாவிப்பதா என பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
