சுற்றுலாத்துறைக்கு மேலும் பலத்த அடி

உலகின் மிகப்பெரிய சுற்றுலா முகவர் நிறுவனமான TUI இலங்கைக்கான சுற்றுலா பயணங்களை இரத்து செய்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தங்களுக்கான வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இம்மாதம் 31 ஆம் திகதி வரையில் முற்பதிவு செய்யப்பட்ட பயணங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாகவும், இல்ங்கையின் சிக்கல் நிலைகள் தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், ஜேர்மனி நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, தொடரும் போராட்டங்கள், மற்றும் கடந்த 09 ஆம் திகதி நடைபெற்ற கலவரங்கள் போன்றனவற்றினால் போதிய பாதுக்காப்பு மற்றும் சுற்றுலாவுக்கு ஏற்ற சூழல் இலங்கையில் இல்லாத காரணத்தினால் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுகளை மேற்கொண்ட பயணிகள் விரும்பினால் தாங்கள் தனியாக பயணிக்க முடியுமென அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிக்காதவர்களுக்கு முழுமையான பணம் மீள வழங்கப்படுமெனவும், பிற்போட்ட திகதிகளில் அல்லது வேறு நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள முடியுமென மேலும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அரசாங்கம் இலங்கைக்கான பயணங்களை தவிர்க்குமாறும், அத்தியாவசிய பயணங்களை மட்டுமே மேற்கொள்ளுமாறும் அறிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதரத்தை மீட்டெடுக்க இருக்கும் ஒரேயொரு வழி சுற்றுலா துறை என்னும் நிலையில், இப்போது இந்த அறிவிப்பு வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா துறையினை முற்று முழுதாக இல்லாமல் செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா துறையினை ஊக்குவிக்க இலங்கை அரசாங்கம் ஆரோக்கியமான எந்த நடைமுறைகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. சுற்றுலாத்துறையினை இலகுபடுத்தி அதற்கான உரிய ஏற்பாடுகளை செய்தால் குறைந்த பட்சம் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் நாட்டுக்கு வரும் நிலை ஏற்படும். அதன் மூலமாவது ஓரளவு வருமானத்தை ஈட்ட முடியும்.

சுற்றுலாத்துறைக்கு மேலும் பலத்த அடி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version