சரியான கடன் தொகை தொடர்பிலான தகவல்கள் இல்லை – பிரதமர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் மற்றும் கடன் தொடர்பிலான முழுமையான நிலவரம் எதிர்கட்சிக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று(18.05) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா “உங்களின் காலை நாங்கள் பிடித்து இழுத்துவிட மாட்டோம். நாட்டின் கடன் நிலவரம் தொடர்பிலான தகவல்களை தந்தால் நாங்கள் ஆதரவினை வழங்க முடியும். அதற்கான வேலைத்திட்டங்களை செயற்படுத்த முடியும்” என கூறியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் போதே பிரதமர் ரணில் இந்த விடயத்தை கூறியதுடன், பல தகவல்கள் இல்லை, சில பிழையாக இருக்கின்றன, சில தகவல்கள் பொய்யாக காணப்படுகின்றன, சில விடயங்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஆகவே சரியான தகவல்களை உடனடியாக வழங்க முடியாதுள்ளது. உண்மையில் சரியான கடன் தொகை எவ்வளவு என சரியாக கூற முடியாத நிலை கான்னப்படுகிறது.

சரியான கடன் தொகை தொடர்பிலான தகவல்கள் இல்லை - பிரதமர்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version