பொலிஸ் மா அதிபர் CID இல் விசாரணையை நிறைவு செய்தார்.

மே 09 ஆம் திகதி போராட்ட காரர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமை தொடர்பில் இன்று பொலிஸ் மா அதிபர் C.D விக்ரமரட்ன மற்றும் விசேட அதிரடிப்படை கட்டளை அதிகாரி உதவி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணைகளை நாடாத்தியுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரிடம் இன்று மாலை 5 மணித்தியாலங்கள் விசாரணை இடம்பெற்றுள்ளது. கடந்த 09 ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக பல முக்கியஸ்தர்களிடம் விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.

போராட்ட காரர்கள் மீது தாக்குதல் நடாத்தியமை மற்றும் நடைபெற்ற கலவரங்களுடன் சம்மந்தப்பட்டவர்கள் என ஏராளமானவர்கள் இதுவைரயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் CID இல் விசாரணையை நிறைவு செய்தார்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version