சர்வதேச நாணய நிதியத்துக்கான ஆலோசகர்கள் நியமிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்தைகளையும், தொடர்ந்து செயற்படுத்தவுள்ள திட்டங்களுக்கான ஆலோசனைகளையும் வழங்குவதற்கான ஆலோசகர் நிறுவனங்களை இலங்கை நியமித்துள்ளதாக சர்வதேச செய்தி முகவர் நிலையம் ஒன்று வெளியிட்டுள்ளது.

தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. லஸார்ட் மற்றும் க்ளிபோர்ட் சான்ஸ் ஆகிய நிறுவனங்கள் இலங்கையின் ஆலோசகர்களாக தங்களது பேச்சுவார்த்தைகளை இலங்கை அமைச்சரவையின் பிரதிநிதிகளுடன் ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இரகசியமாக நடைபெற்று வருவதனால், தங்களது செய்தி சேவைக்கு தகவல்களை வழங்கியவர்களது பெயர்களை வெளியிட வேண்டாமென கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் உடனடி கடன் மீள் செலுத்துகைக்கான நிலுவை 12 பில்லியன் டொலர்கள் உள்ளடங்கலாக மற்றைய கடன்களை மீள் செலுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் சர்வதேச நாணய நிதியம், ஏனைய கடன் வழங்கிய நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளை வழங்குவதற்கான ஆலோசனைகளை வழங்குதல், நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பி அதன் மூலம் கடன்களை செலுத்த நடவடிக்கை எடுத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு குறித்த நிறுவனங்கள் ஆலோசனைகளை வழங்கவுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்துக்கான ஆலோசகர்கள் நியமிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version