முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸடன் பெர்னாண்டோ இன்று காலையில் குற்றப்புலனாய்வு துறை காரியாலயத்தில் முன்னிலையாகியுள்ளார்.
மே மாதம் 09 ஆம் திகதி காலி முகத்திடல், மற்றும் அலரி மாளிகை பகுதிகளில் போராட்டக்காரர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் 22 முக்கியஸ்தர்களை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் வழங்கியிருந்த பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இன்றைய விசாரணைகளில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைதாகலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.