சுற்றுலா அதிகாரசபை தலைவர் இராஜினாமா

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை, புதிதாக பதவியேற்ற சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சுற்றுலா துறை அமைச்சரின் தவறான அணுகுமுறையே இந்த பதவி விலகளுக்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார். “சுற்றுலா துறையின் முன்னேற்ற நடவடிக்கைள் தொடர்பில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கோரியிருந்ததாகவும், அதற்கான கூட்டங்கள் 21, 23 திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் இரத்து செய்யப்பட்டன. நாடு வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில் சுற்றுலாத்துறையே நாட்டை கட்டியெழுப்ப கூடிய வழியை கொண்டுள்ள நிலையில் இவ்வாறான கேவலமான நடைமுறை ஏற்புடையவையல்ல” எனவும் அவர் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர் புதிய தலைவரையும், நிர்வாக பணிப்பாளர்களையும் நியமிக்க விரும்புவதாக தனக்கு தென்படுவதாகவும், அதன் காரணமாக தான் பதவியிலிருந்து விலகுவதாகவும் அவர் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

தான் கெளரவ பதவியாகவே இந்த பதவியினை வகித்ததாகவும், பதவியேற்ற 30 மாதங்களில் சம்பளமோ, பண சலுகைகளோ, வாகன சலுகைகளோ பெறவில்லையெனவும், வெளிநாட்டு பயணங்களுக்கான பயண செலவுகள், தங்குமிட செலவுகள் தனது தனிப்பட்ட பணத்திலேயே செலவு செய்யப்பட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ள வழக்கறிஞரான கிர்மாலி பெர்னாண்டோ கடிதத்தில் கடந்த 30 மாதங்களில் செய்யப்பட்டுள்ள முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் தெரிவித்துள்ளார்.

கிர்மாலி பெர்னாடோவினை பதவி நீக்கம் செய்யுமாறு இலங்கை வர்த்தக சம்மேளனம் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தெரிவித்திருந்தது. இலங்கை சுற்றுலாத்துறை வீழ்ச்சிக்கு இவர் முக்கியமான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சொத்துக்களை அவரது குடும்ப உறவினர்கள் பாவித்துள்ளமை தொடர்பான குற்றச்சாட்டுகளும் இவர் மீது கடந்த காலங்களில் முன் வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா அதிகாரசபை தலைவர் இராஜினாமா
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version