மஹிந்தவிடம் விசாரணை

முன்னாள் பிரதமரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற கலவரம் தொடர்பிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று மாலை 3 மணித்தியாலங்கள் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் வைத்து CID நீண்ட வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பில் முக்கியஸ்தர்கள் பலர் அடங்கலாக பல நூற்றுக்கணக்கானவர்களிடம் குற்றப் புலனாய்வு துறையினர் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். அத்துடன் ஏராளமானவர்களை கைது செய்துமுள்ளனர்.

மஹிந்தவிடம் விசாரணை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version