லிட்ரோ சமையல் எரிவாயு எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கும் நிலையுள்ளதாக அதன் தலைவர் இன்று தெரிவித்துள்ளார். நாளை(30.01) மதியம் 1 மணிக்கு எரிவாயு சிலண்டர்களோடு ஒரு கப்பல் இலங்கை வரவுள்ளதாகவும், அவ்வாறு வருகை தந்தால் புதன்கிழமை முதல் சமையல் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக “நாளை” என லிற்றோ நிறுவனம் தெரிவித்து விநியோகத்தை பிற்போட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை கப்பல் வந்ததன் பின்னரே இந்த அறிவிப்பினை உறுதி செய்யும் நிலை காணப்படுகிறது. ஏற்கனவே இலங்கைக்கு வந்த எரிவாயு கப்பல், எரிபொருள் நிரப்ப முடியாத நிலையில் இந்தியாவுக்கு சென்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
