பாணந்துறை, அத்துளுகமையில் காணமல் போய், சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பிலான தகவல்களை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் கொலை என்ற சந்தேகம் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலை வெளியிட்டிருந்தார்.
சிறுமியின் உடல் பாணந்துறை பிரேதவரையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கொரனோ பரிசோதனை முடிவு வெளிவந்த பின்னர் உடற்கூற்று பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது. உடற்கூற்று பரிசோதனை மூலமே சிறுமியின் மரணத்துக்கான காரணம் தெரிய வரும். இன்று(30.05) அநேகமாக கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவருமென்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை இந்த சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், சந்தேகத்துக்குரியவர்கள் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை குற்றப் புலனாய்வு துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
