வவுனியா, கணேசபுரம் பகுதியில் நேற்று முன்தினம் மரணமடைந்த 16 வயது மாணவி அதிக நீர் உட்ச் சென்றமையினால் ஏற்பட்ட மூச்சு திணறலினால் உயிரிழந்துள்ளார் என உடற்கூற்று பரிசோதனை மூலம் வைத்தியர்களினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. உடலில் வேறு எந்த அசம்பாவிதங்கள் நடைபெற்றதற்கான சான்றுகளும் இல்லையென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாணவியின் இறப்பில், ஏற்பட்ட சந்தேகம் நிறைவுக்கு வந்துள்ளது. மாணவியின் இறப்பு தற்கொலை என்ற முடிவுக்கு வரக்கூடியதாக உள்ளது.
தொடர்புடைய செய்தி
