இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர, அரசியல் சிக்கல் நிலை காரணமாக இலங்கையில் கிரிக்கெட் போட்டிகளுக்கு மக்கள் ஆதரவு எவ்வாறு இருக்குமோ என்ற கேள்விக்குறி ஏற்பட்டது. அந்த கேள்வி மற்றும் பயம் தற்போது தவிடு பொடியாகியுள்ளது.
கொழும்பில் நடைபெறவுள்ள முதலிரு 20-20 போட்டிகளுக்கமான டிக்கெட்கள் முழுமையாக விற்று தீர்ந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. 07ஆம் 08 ஆம் திகதிகளில் முதலிரு போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதேச மைதானத்தில் நடைபெறவுள்ளன. மூன்றாவது 20-20 போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டி பல்லேகலவில், நடைபெறவுள்ளது.
நேற்று(04.06) மாலை வேளையில் முதலிரு போட்டிகளுக்கான டிக்கெட்கள் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளுக்கான டிக்கெட்களுக்கும் வரிசையில் இலங்கை கிரிக்கெட் முன்றலில் மக்கள் நின்றனர்.
இந்த ஆரோக்கியமான நிலைமை இலங்கைக்கு சிறப்பாக அமையும். ஆசிய கிண்ண போட்டிகள் எந்த சிக்கல்களுமின்றி இலங்கையில் நடைபெற இந்த தொடர் முக்கிமானதாக அமையும். போட்டிகள் நடைபெறுவதனை பார்ப்பதன் மூலம், மேலும் அவுஸ்திரேலியா ரசிகர்கள் இலங்கை வருவதற்கான வாய்ப்புகளும் ஏற்படும்.
