டீசல் விநியோம் மட்டுப்படுத்தப்பட்டது.

டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுளளதாக எரிபொருள் விநியோக சங்கம் தெரிவித்துள்ளது. டீசல் கையிருப்பு குறைவடைந்துள்ளமையினால் 2500 மெற்றிக் தொன் அளவினளான டீசல் ஒரு நாளைக்கு விநியோகம் செய்யப்படுவதாக சங்கத்தின் செயலாளர் கபில நயோட்டுன தெரிவித்துள்ளார். ஆனால் பெற்றோல் விநியோகம் வழமை போல் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

40,000 மெற்றிக் தொன் அளவிலான டீசல் மாத்திரமே கையிருப்பில் இருப்பதாகவும், அதனால் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில், முன்னுரிமை அடிப்படையிலேயே டீசல் வழங்கப்படுமெனவும் கபில நயோட்டுன தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டமாக டீசலுக்கு பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அது எப்போது நாட்டை வந்தடையுமென தெரியாதெனவும், 09 ஆம் 10 ஆம் திகதிகளில் வருகை தரும் என நம்புவதாகவும், இருப்பினும் அது இன்னமும் உறுதி செய்யப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கடனுதவி திட்டத்தின் மூலம் 16 ஆம் திகதி அடுத்த கட்டமாக டீசல் வருகை தரவுள்ளது.

புதிய எரிபொருள் விநியோகிப்பவர்களுக்கான வேலைத்திட்டங்கள் நடைபெறுவதாகவும், 90 விண்ணப்பங்கள் கிடைக்க பெற்றுள்ளதாகவும், தொடர்பிலான கூட்டம் பெற்றோலிய கூட்டுத்தாபன வர்த்தக துறையினருக்கும், வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகரவுக்கும் இடையில் நேற்று நடைபெற்றுள்ளது.

டீசல் விநியோம் மட்டுப்படுத்தப்பட்டது.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version