மக்களுக்காக இலங்கை அணி இன்று விளையாட வேண்டும்.

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டி அவுஸ்திரேலிய அணிக்கு சார்பான போட்டியாக அமைந்தது. பந்துவீச்சு, துடுப்பாட்டம் என இரு பக்கமாக மிக அபாரமாக செயற்பட்டு வெற்றியினை பெற்றுக் கொண்டது அவுஸ்திரேலிய

இலங்கை அணி துடுப்பாட்டத்தில் கவுண்டு கொட்டியது தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. இலங்கை அணி பலமான அவுஸ்திரேலியா அணிக்கெதிராக கடந்த பெப்ரவரி மாதத்தில் சிறப்பாக செயற்பட்டது. வெற்றியினை பெறாவிட்டாலும் நல்ல முறையில் விளையாடுவது முக்கியம். அதனை இன்றைய போட்டியில் இலங்கை அணி செய்யுமென நம்பலாம்.

மைதானம் நிறைந்த பார்வையாளர்களோடு நேற்றைய போட்டி நடைபெற்றது. இன்றைய போட்டிக்கான டிக்கெட்களும் தீர்ந்துவிட்டன. இலங்கை மத்திய வரிசை மோசமாக ஆட்டமிழந்தது நேற்றைய போட்டியில் இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவு தந்தது. முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களும் பெற்ற ஓட்டங்களே அணியின் ஓட்டங்களை ஓரளவேனும் உயர்த்தியது. அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஜோஸ் ஹெசல்வூட் மற்றும் மிட்செல் ஸ்டார்க ஆகியோர் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாற வைத்துள்ளனர்.

இலங்கையின் அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக பிரகாசிக்க வேண்டும். அதுவே முக்கியம். 20-20 போட்டிகளில் ஓட்டங்கள் அதிகம் என்றால் மட்டுமே பந்துவீச்சாளர்கள் அதிக அழுத்தங்களை பிரயோகிக்க முடியும்.

நேற்றைய போட்டி நேற்றோடு முடிந்து விட்டது என்ற நிலைப்பாட்டுடன் இலங்கை அணி விளையாட வேண்டும். அணியில் மாற்றங்கள் அவசரப்பட்டு செய்யக்கூடாது. அவுஸ்திரேலிய அணி மாற்றங்களின்றி விளையாடும் என நம்பலாம்.

இன்று இலங்கை அணி மீள்வருகை ஒன்றை காட்டினாள் இலங்கை ரசிகர்கள் சந்தோஷமடைவார்கள். கவலையிலுள்ள, மன அழுத்திலுள்ள மக்களுக்காக இலங்கை அணி இன்று விளையாட வேண்டும்.

வீடியோ இணைப்பு.

SL v Aus - மரண அடியிலிருந்து மீளுமா இலங்கை? விளையாட்டு வலயம். V Media News.
மக்களுக்காக இலங்கை அணி இன்று விளையாட வேண்டும்.
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version