முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் கடந்த வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்கள் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சரும், ஊடக பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறை நிரப்பு பிரேரணையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு, அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளங்கள், தவிர்க்க முடியாத அத்தியாவசிய அரச செலவினங்கள், மக்களுக்கான உதவி திட்டங்கள், மற்றும் முக்கிய இதர கொடுப்பனவுகள் வழங்கப்படுவதனை உறுதி செய்யும் முகமாக இந்த வரவு செலவு திட்டம் தயார் செய்யப்பட்டு வருவதாக மேலும் அமைச்சர் பந்துல தெரிவித்துள்ளார்.
சந்தையின் நிலவரத்தையும், பொருளாதர மேம்படுத்தலையும் கருத்தில் கொண்டு இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டு, அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்குள் இயங்கும் நிறுவனங்கள், அமைச்சுக்கள், மற்றும் அரச அலுவலகங்களில் தேவையற்ற செல்வனங்களை தவிர்த்தல், முறைகேடுகள் நடைபெறுவதை இறுக்கமாக கண்காணிக்கும் நடைமுறைகளும் செயற்படுத்தப்பட்டுளளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.