இருளில் மூழ்குமா இலங்கை?

இலங்கை மின்சாரசபையின் பொறியிலாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சாரசபையின் பொறியிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து ஜனாதிபதியினால் மின்சாரசபை ஜூன் 08 ஆம் திகதி முதல் அத்தியாவசிய சேவையாக அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்ததை தொடர்ந்து தாம் பணி புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்ததாக சங்கம் மேலும் கூறியுள்ளது. இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் படிப்படியாக மின்சாரம் நிறுத்தப்பட்டு காலை 7 மணி முதல் 8 மணி வரையான நேரப்பகுதியில் நாடு முழுவதும் இருளில் மூழ்கும் என குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

மின்சார சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான கலந்துரையாடலில் அமைச்சர் காஞ்சன விஜயசேகர பாராளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பில் விடா பிடியாக இருந்ததாகவும், நிபுணர்த்துவர்களின் ஆலோசனைகளை பெற தாம் 02 வாரங்கள் காலம் கேட்டதற்கும் வழங்கவில்லையெனவும், கலந்துரையாடலின் இடை நடுவே எழுந்து சென்றதாகவும் சங்கம் அமைச்சர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த சட்ட திருத்தம் மூலம் மன்னர், பூநகரி ஆகிய பகுதிகளில் இந்தியாவின், அதானி குழுமத்துக்கு 500 மெகா வோட்ஸ் மின்சாரத்தை வழங்கும் திட்டம், உரிய நடைமுறைகளின்றி இலகுவாக வழங்கப்படுமென கூறியுள்ள சங்கத்தினர், தமது கோரிக்கைகளை கூட அமைச்சர் கேட்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.

“இந்த சட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படுமெனவும், அதனை மீள பெறுவதற்கோ, கைவிடுவதற்கோ வாய்புகள் இல்லையெனவும் அமைச்சர் கூறியதாக தெரிவித்துள்ள சங்கத்தின் பேச்சாளர், எந்தவித நெகிழ்வு தன்மையையும் காட்டவில்லையென கூறியுள்ளனர். அத்தோடு அமைச்சர் வேறு சிலரின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாதுகாப்பை கருத்திற் கொண்டு, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விநியோக நிலையங்களை படிப்படியா நிறுத்தி விட்டு பொறியிலாளர்கள் குறித்த நிலையங்களில் இருந்து வெளியேறுவார்கள் என இலங்கை மின் பொறியிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இருளில் மூழ்குமா இலங்கை?
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version