முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்று நேற்று(08.06) பிடிவிராந்து பிறப்பித்துள்ளது.
மே 09 ஆம் திகதி காலி முகத்திடல், அலரி மாளிகை முன்றல் ஆகிய பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தன்னை கைது செய்வதற்காக தேடுவதனை நிறுத்துமாறு கோரி ரிட் மனுவினை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் இந்த பிடிவிராந்தை பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல முக்கியஸ்தர்கள் இந்த சம்பவத்தில் சந்தேக நபர்களாக உள்ளடக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் கைது செய்யப்பட்டுமுள்ளனர்.
