நெருக்கடியை மிகைப்படுத்தும் பேச்சாளர் பிரதமர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர சிக்கல் நிலையினை மிகைப்படுத்தி தகவல்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டு வருவதாகவும், அதனால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை மேலும் அதிகரிப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸ்ஸநாயக்கே தெரிவித்துள்ளார். மேலும் மிகைப்படுத்தப்பட்ட பேச்சாளர் பிரதமர் எனவும் கூறியுள்ளார்.

இவ்வாறு பிரச்சினைகளை மிகைப்படுத்தி கூறுவதன் மூலம் பிரதமர் “தன்னுடைய தோல்விகளை மறைப்பதாகவும், தன்னாலேயே பிரச்சினைகள் இந்தளவு தீர்க்கப்பட்டதாக வெளிக்காட்டி தனது அரசியில் சுய இலாபத்தை தேடுகிறார்” என அனுரகுமார மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் எரிபொருள் ஒரு நாளுக்கு மட்டுமே இருப்பதாக கூறினார். மக்கள் வழமையை விட அதிகமாக வரிசையில் நின்றார்கள். 3 ட்ரில்லியன் பணம் அச்சிட வேண்டியுள்ளதாக கூறினார். பொருளாதர அறிவுள்ளவர்கள் வங்கிகளிலுள்ள பணத்தினை மீளப் பெற்றனர். உணவு தட்டுப்பாடு ஏற்படும். இரண்டு வேளை உணவு உண்ண பழ வேண்டுமென கூறினார். மக்கள் உணவு பொருட்களை அதிகமாக வாங்கி சேமித்தனர். இந்த நடவடிக்கைகள் மூலம் நிலைமை மோசமடைந்தது என மேலும் அவர் விளக்கமளித்துள்ளார்.

நெருக்கடியை மிகைப்படுத்தும் பேச்சாளர் பிரதமர்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version