நேற்றைய தினம் பாரளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேரா திங்கட்கிழமை அமைச்சராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. திங்கட் கிழமைகளில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகின்றமை வழமை.
பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்ததனை தொடர்ந்து அந்த இடத்துக்கு முன்னணி வியாபர நிபுணர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய இரு அமைச்சுகள் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் தொழில் நுட்பம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சுக்கள் தம்மிக்க பெரேராவுக்கு வழங்கப்படவுள்ளன என்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த விடயமே.
இந்த நியமனத்தின் மூலம் வெளிநாட்டு முதலீட்டுகளை அதிகரிக்க முடியுமெனவும், வெளிநாட்டு வருமானம் அதிகரிக்குமெனவும் நம்பப்படுகிறது. இவற்றினூடாக அன்னியச் செலவாணியினை அதிகரிக்கலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது அமைச்சு பதவி மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, சமூக மேம்படுத்துகை அமைச்சு பாராளுமன்ற உறுப்பினர் பவித்திரா வன்னியாராச்சிக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. பெண் ஒருவருக்கான அமைச்சு பதவி வழங்கப்படவில்லை என்ற விமர்சனத்துக்கு முடிவு கட்ட இந்த பதவி வழங்கப்படுவதாக நம்பப்படுகிறது.