பெற்றோலிய கூட்டுத்தாபனத்திலும் அதிகமாக எரிபொருள் வெளியேயுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் உள்ள எரிபொருள் கையிருப்பிலும் பார்க்க வெளியில் உள்ளவர்களிடம் அதிக எரிபொருள் கையிருப்புள்ளதாக வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர நேற்று(11.06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் முதல் தற்போது வரை நாட்டுக்கு வருகை தந்துள்ள எரிபொருள் தொகையினை கணக்கிட்டு பார்க்கும் போது எரிபொருள் களஞ்சிய சாலைகளான சப்புகஸ்கந்த, கொலன்னாவ, முத்துராஜாவெல, மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன விநியோக நிலையங்களிலுள்ள கையிருப்பிலும் பார்க்க வெளியே உள்ள நபர்களிடம் அதிக கையிருப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் எரிபொருள் விநியோகத்தில் குறைகள் ஏற்பட்டுள்ளதையும், சீரான முறையில் வழங்க முடியாமல் போனதையும் ஏற்றுக் கொண்ட அமைச்சர், நுகர்வோராக பதிவு செய்யப்பட்டவர்கள் ஒரு மாதத்துக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதாகவும், ஆனால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் 5,6 நாட்களுக்கான எரிபொருளே காணப்படுவதாகவும் கூறியுள்ளார். இவ்வாறான 2000 நுகர்வோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த பிழையான நடைமுறையும் எரிபொருள் வரிசைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

எரிபொருள் பெறும் நடைமுறை தொடர்பான பதிவினை தற்போது இணையத்தில் பதிவு செய்து எரிபொருள் நிரப்பு நிலையங்களின் இருப்பை அறிந்து கொள்ள முடியுமெனவும், இயலுமானவர்கள் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தோடு பதிவினை மேற்கொள்ளுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் அமைச்சர் காஞ்சன விஜயசேகர.

நகர பகுதிகளில் இந்த நடைமுறை கடினமெனவும், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் ஒவ்வொருவரது எரிபொருள் நிரப்பு தொகையையும் கணக்கிட்டு அந்தந்த எரிபொருள் நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் அளவினை விநியோகிக்க முடியுமெனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திலும் அதிகமாக எரிபொருள் வெளியேயுள்ளது.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version