SL v AUS – போராடிய இலங்கை அணி

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறக்கூடிய நிலையில் காணப்பட்ட போதும் கிளன் மக்ஸ்வெல்லின் இறுதி நேர அதிரடி துடுப்பாட்டம் இலங்கை அணியிடமிருந்து வெற்றியினை பறித்து எடுத்தது.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா அணி 5 போட்டிகளடங்கிய தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

301 ஓட்டங்கள் வெற்றியிலக்குடன் அவுஸ்திரேலியா அணி துடுப்பாடிய வேளையில் மழை பெய்தமையினால் 44 ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டு, 282 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு அவுஸ்திரேலியா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியா அணி 42.3 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 282ஓட்டங்களை பெற்றது. இதில் கிளன் மக்ஸ்வெல் ஆட்டமிழக்கமால் 80(51)ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 53 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டோனிஸ் 44 ஓட்டங்களையும், அரோன் பிஞ்ச் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிது ஹசரங்க 4 விக்கெட்களையும், தனது அறிமுக போட்டியில் விளையாடிய 19 வயது டுனித் வெல்லாலகே 2 விக்கெட்களையும், மகேஷ் தீக்ஷன, தஸூன் சாணக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களை பெற்றது. இந்த ஓட்ட எண்ணிக்கை கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வெற்றி பெறக்கூடிய ஓட்டஎண்ணிக்கை.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களது சிறந்த இணைப்பாட்டம் இலங்கை அணியினது இந்த ஓட்ட எண்ணிக்கைக்கு காரணமாக அமைந்தது. தனுஷ்க குணதிலக 55 ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 56 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்களது ஆரமப விக்கெட் இணைப்பாட்டம் 115 ஓட்டங்கள். நான்காவது விக்கெட் இணைப்பாட்டமாக குசல் மென்டிஸ், சரித் அசலங்க ஆகியோர் 77 ஓட்டங்களை பகிர்ந்து இலங்கை அணியை மேலும் பலமான நிலைக்கு கொண்டு சென்றனர்.

இறுதி நேரத்தில் அதிரடியாக துடுப்பாடிய வனிது ஹசரங்க 19 பந்துகளில் 37 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

குசல் மென்டிஸ் மிகச்சசிறப்பாக துடுப்பாடி 86 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். 

அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் அஸ்டன் எகர், மார்னஸ் லபுஷேன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும், ஜோஷ் ஹெசல்வூட், ஜய் ரிச்சட்சன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.

இலங்கை

1 தனுஷ்க குணதிலக்க, 2 பத்தும் நிஸ்ஸங்க, 3 குசல் மென்டிஸ் (வி.கா), 4 சரித் அசலங்க, 5 தனஞ்சய டி சில்வா, 6 தஸூன் சாணக்க (தலைவர்), 7 வனிந்து ஹசரங்க, 8 சமிக்க கருணாரட்ன, 9 துனித் வெல்லாலகே, 10 மகேஷ் தீக்ஷண 11 துஸ்மாந்த சமீர

அவுஸ்திரேலியா

1 டேவிட் வோர்னர், 2 அரோன் பிஞ்ச் (தலைவர்), 3 ஸ்டீவன் ஸ்மித், 4 மார்னஸ் லபுஷேன், 5 அலெக்ஸ் கேரி (வி.கா), 6 மார்கஸ் ஸ்டோனிஸ், 7 கிளென் மக்ஸ்வெல், 8 அஷ்டன் எகர், 9 பட் கம்மின்ஸ், 10 ஜே ரிச்சர்ட்சன், 11 ஜோஷ் ஹெசல்வூட்

SL v AUS - போராடிய இலங்கை அணி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version