நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அபில்டன் (Micheal Appleton) மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு இன்று திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இன்று (16.06) வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்யக்கூடிய முக்கிய இடங்களை ஆவணப்படுத்தி பொருளாதார மேம்பாடுகளை ஊக்குவிக்கும் திட்டங்கள் அடங்கிய கையோடு ஒன்றினை, நியூசிலாந்து தூதுவரிடம் ஆளுநர் கையளித்தார்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பீ.வணிகசிங்க, ஆளுநரின் செயலாளர் எல்,பீ. மதநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
