தற்போதைய ஊரடங்கு அமுலிலுள்ள காலப்பகுதியில் புத்தக விற்பனை நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் கடிதம் மூலமாக புத்தக விற்பனை நிலையங்கள் திறக்க அனுமதி வழங்குமாறு சுகாதர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் முன் வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுளளது.
இலங்கை புத்தக பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் சமந்த இந்தீவிர சமரசிரி பொலிஸ் மா அதிபரிடம் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கையினை பொலிஸ் மா அதிபர் எடுத்திருந்தார்.
ஒன்லைன் மூலம் கல்வி நடவடிக்ககைகளில் ஈடுபடும் பிள்ளைகள், தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கல்வி கற்கவேண்டிய நிலை காணப்படுவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புத்தக விற்பனை நிலையங்களை திறப்பது தொடர்பிலும், சுகாதர முறைப்படியே இயங்குவதை கண்காணிக்குமாறும் மாகாண சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர்கள், மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.