தமிழக வீரர் நடராஜனுக்கு கொவிட் தொற்று உறுதி

தமிழகத்தில் இருந்து இந்திய கிரிகட் குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டு தமிழக மத்தியில் பெருமை சேர்த்திருந்தவர் நட்டு எனப்படும் நடராஜன்.

கொவிட் தொற்றுக்காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஐ.பி.எல் போட்டிகள் தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில் இன்றைய தினம் சன்ரைஸஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கப்பிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

சன்ரைஸஸ் அணியில் இடம்பிடித்துள்ள நடராஜன், இப்போட்டியில் பங்குபற்றும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தன்னைத் தானே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும். இதுவரை கொவிட் அறிகுறிகள் எதுவும் நடராஜனுக்கு ஏற்படவில்லையெனவும், அவர் நலமாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக வீரர் நடராஜனுக்கு கொவிட் தொற்று உறுதி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version