கொழும்பு தேசிய வைத்தியசாலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இதய சத்திர சிகிச்சை செய்யும் அளவினை தாம் குறைத்துள்ளதாக இதய சத்திர சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். மருந்து தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
மக்கள் கோவம் காரணமாக, எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வைத்தியர்களுக்கும், வைத்திய சேவையாளர்களுக்கும் முன்னுரிமை தர மறுக்கின்றனர். அத்தியாவசிய சேவையினருக்கு என ஒதுக்கப்பட்டுள்ள நிலையங்களில் 6-10 மணித்தியாலங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் வெளியிடப்பட்டுள்ள கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சத்திரசிகிச்சை நிபுணரும், ஒரு வாரத்துக்கு ஒரு நாளுக்கான சத்திர சிகிச்சை கூடத்தை பாவிக்கவுள்ளதாகவும், மட்டுப்படுத்தப்பட்ட கனிஷ்ட வைத்தியர்கள், தாதிமார், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் கனிஷ்ட ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
எப்படி இருப்பினும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் மிகவும் அவசரமான நோயாளர்களுக்கே சத்திர சிகிச்சைகள் செய்யப்படுமெனவுவம் தெரிவித்துள்ளனர்.
