இணையவழி கல்வி சேவைக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

நாளை(20.06) முதல் ஒருவாரத்துக்கு கொழும்பு மற்றும் முக்கிய நகர பாடசாலைகளை மூடுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போக்குவரத்தினால் பாதிப்படையாத இடங்களில் பாடசாலைகளை நடாத்துமாறும், அந்தந்த அதிபர்கள் முடிவெடுக்கலாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் பாடசாலை மாணவர்கள் கல்வியினை தொடர, இணைய வழி கல்வியினை வழங்குமாறு அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அவர் இன்று அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா காலத்தில் 2021 ஆம் ஆண்டு 194 பாடசாலை நாட்களில் மேல் மாகாண பாடசாலைகள் 100 நாட்களையும், ஏனைய மாகாண பாடசாலைகள் 77 நாட்களை இழந்ததாகவும், 2020 ஆம் ஆண்டு 229 பாடசலை நாட்களில் 127 நாட்களை மேல் மாகாண பாடசாலைகளும், 86 நாட்களை மற்றைய மாகாண பாடசாலைகளும் இழந்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், கல்வியமைச்சராக பிள்ளைகளது பாடசாலை நாட்களையும், பாடவிதான அளவுகளையும் குறைக்க தான் விரும்பவில்லையெனவும் கூறியுள்ளார்.

இணையவழி கல்வி சேவைக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version