வவுனியா, ஓமந்தை லங்கா IOC பெற்றோல் நிலையத்தில் பெற்றோலை வைத்துக்கொண்டு வழங்கவில்லை என கூறி மக்கள் வீதி மறிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
வவுனியா, யாழ்ப்பாணம் A 9 வீதியினை மறித்து மக்கள் போராட்டத்தை சற்று முன்னர் ஆரம்பித்துள்ளார்கள். இராணுவம் அந்த பெற்றோல் நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டாலும், தாங்கள் அந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை எனவும், பொலிசார் கைது செய்தாலும் பரவாயில்லை என போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்றும் குறித்த எரிபொருள் நிலையத்தில் இவ்வாறு எரிபொருள் இல்லையென கூறிவிட்டு இன்று காலையில் எரிபொருள் வழங்கப்பட்டதாகவும், அதேபோன்றே தற்போது எரிபொருள் இல்லையென கூறுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். எரிபொருள் இல்லாவிட்டால் அளவு கோலினால் அளந்து காட்டினால் தாம் கலைந்து சென்றுவிடுவோம் என தெரிவிக்கும் மக்கள், எரிபொருள் நிலையத்தில் அளவு கோல் இல்லையென கூறியதாகவும், அளவுகோல் இல்லாமல் எவ்வாறு எரிபொருள் நிலையத்தை நடாத்த முடியுமெனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலதிக தகவல்கள் கிடைக்கும் போது வெளியிடுவோம்.
