ஐக்கிய நாடுகள் சபையின் 76வது பொதுச் சபைக் கூட்டத் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. சற்று முன்னர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உரையை நிறைவு செய்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும், இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைள் தொடர்பிலும் அவர் அங்கே உரையாற்றினார். பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்தி செல்ல. அனைத்து நாடுகளது ஆதரவையும் ஜனாதிபதி கோரியிருந்தார்.
ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் மக்கள் வாக்குகள் மூலமாக இந்த நாட்டை சமாதானமான,நிலையான மேம்பட்ட நாடக ஆட்சி செய்வதற்கு ஆணையினை வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் மக்களுக்கு தேவையான சிறந்த திட்டங்கள் மூலம் வளமான நாடக இலங்கையை மாற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் உள்ளக அமைப்புகள் மூலமாக இலங்கையின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, அனைத்து மக்களும் சமாதானமாக, நிம்மதியாக வாழும் நிலை உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தீவிர வாத தாக்குதல்கள் 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதற்கு முதலில் 30 வருட தீவிரவாதம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. மீண்டும் இலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க இடமளிக்கப்படாது எனவும் ஜனாதிபதியின் உரையில் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முழுமையான உரை எமது தளத்தில் வெளியிடப்படும்.