கோட்டா – ரணில் கள்ள அரசாங்கத்தை அகற்றுவதே நாட்டை கட்டியெழுப்ப வழி

கோட்டா, ரணிலின் கள்ள அரசாங்கத்தை அகற்றுவதே எமது நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஒரே நடவடிக்கையாகும். திறமையற்ற, பலவீனமான கோட்டாபய ராஜபக்ஷ மொட்டு அரசாங்கத்தினாலயே இந்நாடு இந்த அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தினால் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. மக்களின் வாழ்வுரிமையை மீட்டுத் தரமுடியாது. இன்னும் வரிசை யுகம் நீடிக்கிறது. இந்நிலை மேலும் மோசமாகி வருகிறது. கோட்டா ரணில் அரசாங்கத்திற்கு நாட்டிலும் அங்கீகாரமும் இல்லை. சர்வதேசத்திலும் அங்கீகாரமும் இல்லை. உறுதியளித்தபடி நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இவர்களிடம் தீர்வுகள் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரச்சினைகளுக்கு எங்களிடம் தீர்வுகள் உள்ளன. அதனால்தான் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமையில் தற்காலிக சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தது மக்களின் அடிப்படைத் தேவைகள் வழங்கி, குறுகிய காலத்தில் புதிய மக்கள் ஆணையைப் பெற்று,தொடர்ந்து ஐந்து வருட ஆட்சியில் இந்நாட்டின் நுண் வர்த்தக முயற்சியான்மை, பொருளாதார மாறுபாடுகள் நுண்ணிய பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்டி, அனைவருக்கும் செழிப்பைக் கொண்டு வரும் மிகப்பெரிய பொருளாதார சக்தியின் வளர்ச்சியை நோக்கி நம் நாட்டை இட்டுச் செல்வோம் என இன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சஜித் தெரிவித்துள்ளார்.

இதை மேற்கொள்ள திறமையான, அநுபவம், மற்றும் ஆற்றல் கொண்ட படித்த, புத்திசாலித்தனமான மற்றும் பிரயோக ரீதியாக செயற்படவல்ல குழு எங்களிடம் உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது.

உங்களால் நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் இல்லை, நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது, நாட்டை ஸ்திரப்படுத்த முடியாது, மக்களை வாழவைக்க முடியாது, தயவு செய்து ஆட்சிப்பொறுப்பை எங்களிடம் வழங்கிவிட்டு, நாட்டு நிலமையை மேலும் மோசமாக்காமல் வீட்டுக்குச் செல்லுங்கள் என கோட்டாபய – ரணில் அரசாங்கத்திடம் இந்த தருணத்தில் கோரிக்கை விடுக்கிறோம். ஆட்சிப் பொறுப்பை ஏற்று இந்நாட்டை இந்தப் படுகுழியில் இருந்து மீட்க நாங்கள் தயாராக உள்ளோம் என சஜித் தெரிவித்துள்ளார்.

கோட்டா - ரணில் கள்ள அரசாங்கத்தை அகற்றுவதே நாட்டை கட்டியெழுப்ப வழி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version